20
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சாலை மறியல் போராட்டம் இன்று காலை நடைபெற்றது.
திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் இன்று காலை முதல் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றது.
இந்த போராட்டங்களில் தமிழகம் முழுவதும் உள்ள திமுகவின் கூட்டணி கட்சிகளான மனித நேய மக்கள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் ஆதரவளித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அதே போல் அதிரை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.