17
அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழகம் முழுவதும் மக்கள் ஆரவாரத்துடன் எதிர்பார்த்த RK நகர் இடை தேர்தலில் TTV.தினகரன் வெற்றிபெற்றார்.
இதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் TTV.தினகரன் மக்களை சந்திக்கும் விதத்தில் பல இடங்களில் உரையாற்றி வருகிறார்.
இதனையடுத்து, தஞ்சை தெற்கு மாவட்டங்களில் வருகிற பிப்ரவரி 10 தேதி முதல் சுற்றுப்பயணம் தொடங்குகிறார்.
தஞ்சை தெற்கு மாவட்டமான அதிராம்பட்டினதிற்கு அடுத்தமாதம்(பிப்ரவரி) 12 தேதி இரவு 8மணியளவில் வருகைதரவுள்ளதாக அக்கட்சி சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.