Home » ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் அமோக வெற்றி-பா.ஜ.க. படுதோல்வி!

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் அமோக வெற்றி-பா.ஜ.க. படுதோல்வி!

by Admin
0 comment

ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர், அல்வர் மக்களவைத் தொகுதிகளிலும், மண்டல்கர் பேரவைத் தொகுதியிலும், காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதையடுத்து, ஆளும் பாஜக அரசு படுதோல்வியினை அடைந்துள்ளது.

மண்டல்கர் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை விட காங்கிரஸ் வேட்பாளர் விவேக் 12,976 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் காலியாக உள்ள மக்களவை, சட்டப்பேரவை தொகுதிளுக்கு ஜனவரி 29-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. முதலில் அல்வார், அஜ்மீர் மக்களவை தொகுதிகளில் எதிர்கட்சியான திகழும் காங்கிரஸ் முன்னணியில் இருந்தது.

மண்டல்கர் சட்டப்பேரவை தொகுதியில் ஆளும் பாஜக முன்னணி வகித்தது. பிறகு மண்டல்கர் சட்டப்பேரவை தொகுதியிலும் காங்கிரஸ் முன்னிலை பெற்று வெற்றி பெற்றது.

ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த இடைத்தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

ஆனால் நடந்து முடிந்த 2 மக்களவை தொகுதி மற்றும் சட்டப்பேரவை தொகுதியில் பாஜக தோல்வியினை சந்தித்துள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter