Home » அதிரைக்கு தேவை அவசர ஊர்தி, தீயணைப்பு நிலையம்!

அதிரைக்கு தேவை அவசர ஊர்தி, தீயணைப்பு நிலையம்!

by Admin
0 comment

அதிரை ரெட்கிராஸ் சொசைட்டியின் சார்பில் கடந்த மாதம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கபட்ட முக்கிய தீர்மானங்களின் ஒன்ராக அவசர ஊர்தி, தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி இருந்தனர்.

இதுகுறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிரை இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் சேர்மன் மரைக்கா இதிரிஸ் அஹமது உள்ளிட்டோர்  பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சிவி சேகர் இடம் வழங்கினார்,

அதில் அதிரை மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார மக்களுக்கும் பயன்படும் வகையில் அரசின் 108அவசர ஊர்தியை பெற்றுதர வேண்டும் என்றும், அதிரையை சுற்றி ஏற்படும் தீவிபத்துகளால் உயிர் சேதத்துடன் பொருள் சேதமும் அவ்வப்போது ஏற்படுவது வாடிக்கையாகி உள்ள நிலையில், போக்குவரத்து மிகுந்த பட்டுக்கோட்டை போன்ற ஊர்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் தீயிக்கு இறையாகி விடுகின்றன எனவும் , மேற்கண்ட இரண்டு கோரிக்கைகளை உடனடியாக செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter