Home » கால அவகாசம்..!

கால அவகாசம்..!

by
0 comment

காலத்தை படைத்த இறைவனே
ஒவ்வொரு நிகழ்வுக்கும், செயலுக்கும்
கால அவகாசம் கொடுக்கிறான்..!

ஆனால் படைப்பினங்கள் மட்டும்
அந்த கால அவகாசத்துக்கு கட்டு படுவதில்லை.

மனிதன் உலகில் அவதரிக்க இறைவன்
கொடுத்த பத்து மாதம்..கால அவகாசம்

அந்த கால அவகாசம் இல்லையெனில்
உலகத்தில் வாழ தகுதியற்றவன் ஆகிறான்.

குறை மாசத்தில் பிறந்த மனிதன்
சக மனிதனை போன்று உலகில் வாழ முடியாது ..
இங்கு அந்த கால அவகாசம் நன்மை..

பிரசவிக்க பத்துமாதம் ஆகும் முன்னே இயற்கையாய் குழந்தை உலகில் தெரிந்து கொள்ளும் முன்பே,

செயற்கை அறிவை பயன்படுத்தி மருத்துவ துறையில்
ஸ்கேன், மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பயன்படுத்தி
இயற்கை நமக்கு தெரியப்படுத்தும் முன்னே
அவசரப்பட்டு என்ன குழந்தை என்று தெரிந்து கொள்ள
தாய்க்கும், சேய்க்கும் உடல் தீங்கை அடைந்து கொள்கிறான்.

நிலத்தில் பயிர் விளைய பல கால அவகாசம்
கொடுத்து பின்னரே அது நமக்கு உணவாக ஆகி
மனித குலத்திற்கு பயன் பெறுகிறது…இங்கும் கால அவகாசம்
அவசியம் ஆகிறது.

இவ்வுலகில் எந்த துறையை எடுத்தாலும்
இறைவன் கொடுத்த கால அவகாசத்திற்கு பிறகே
நன்மை பயக்கிறது.. வளம் பெறுகிறது.

அது போன்றே இயற்கை அறிவால் உலகில்
பிறந்த மனிதன், செயற்கை அறிவில் (அறிவியல் மற்றும் செயல் திறனில்) புலமை பெற கால அவகாசம் தேவை அவசியமாகிறது.
இது இறைவனின் செயல் திட்டமாகும்…இதை மாற்ற மனிதனுக்கு
எந்த தகுதியும் இல்லை.
நமது உயிர் சுவாசம் அவனிடம் இருக்கும்போது…இறைவன் திட்டத்தை
மாற்ற படைப்பினங்கள் நமக்கு என்ன தகுதி..

இதை அறிந்த நம் மூதறிஞர்கள் நமக்கு கற்று கொடுத்த சொல் தான்.. பொறுத்தார் பூமி ஆழ்வார்.

பொறுமை கடலினும் பெரிது…இறைவனின் செயல் திட்டங்கள் உலகில் பொய்யாவதில்லை…என்று நாம் அறிந்து கொள்வோம். ஈருலக வெற்றி பெறுவோம்.

 

 

 

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter