54
அதிரையில் சிறப்புடன் செயல்பட்டு வரும் இக்ரா இண்டர்நேஷனல் பள்ளியில் ஏராளமான மானவ மாணவிகள் மார்க்க கல்வியுடன் உலக கல்வியையும் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களின் திறன்களை வளர்க்க பல்வேறுபட்ட போட்டிகள் நடத்தபட்டு ஆண்டு விழாவின்போது அவர்களுக்கு பரிசளிப்பு வழங்கி சிறப்பிப்பார்கள் அந்த வகையில் இவ்வருடத்தின் ஆண்டு விழா இன்று (05-02-2018) மதியம் இரண்டரை மணி முதல் லாவண்யா திருமண மண்டபத்தில் தொடங்க உள்ளன, இதில் சிறார்களின் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளதாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கபடுவதுடன் அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளபட்டுள்ளது.