தமிழக ரயில்வே திட்டங்களுக்காக 2,548 கோடி ரூபாய் 🏛மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதுபோல் கர்நாடக மாநிலம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு தனித்தனியே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2009 முதல் 2014 வரை தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.879 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், 2018 – 19ம் நிதியாண்டில் 2,548 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 190 சதவீதம் கூடுதல் என்பது குறிப்பிட வேண்டியவை. தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 48 கி.மீ. தூர ஓசூர்- பயப்பனஹள்ளி (பெங்களூர்) இரட்டை அகல 🛤ரயில் பாதை திட்டத்துக்கு ரூ. 376 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் ஏற்கெனவே கிடப்பில் போடப்பட்டுள்ள, மற்றும் தொடங்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது வரவேற்கத்தக்கது.
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 2,548 கோடி ரூபாய் ஒதுக்கீடு
17
previous post