42
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அய்யூப் கான் வயது 42 இவர் பிலால் நகரில் வசித்து வருகிறார்.
இவர் கிராணி மளிகை கடை அருகில் 25 ஆண்டுகளாக வடை சமோசா கடை நடத்தி வருகிறார்.இன்று மாலை நடைபெறவுள்ள இஸ்திமாவை முன்னிட்டு வெளியூர் மக்கள் இஸ்திமாவிற்கு வருகை தருகிறார்கள். இதனை கருத்தில் கொண்ட அய்யூப் கான் இன்று காலை சுபுஹ் முதல் பதியம் 12.00 மணிவரை வடை ,சமோசா வெளியூர் மக்களுக்கு இலவசமாக அளித்து வருகிறார். இதனை கண்ட அதிரை மக்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.