Home » செய்தியாளரை தாக்கிய ஹெச்.ராஜாவின் சகோதரர்..!!

செய்தியாளரை தாக்கிய ஹெச்.ராஜாவின் சகோதரர்..!!

0 comment

பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் சகோதரர், செய்தியாளரை தாக்கிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 2006 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 32 லட்சம் ரூபாயை அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கும்பகோணம் கோட்ட மேலாண்மை இயக்குநர் ராஜி, கும்பகோணம் மண்டலத்தில் தலைமைக் கணக்கு அதிகாரியாக இருந்த சுந்தர் உள்ளிட்ட 21 பேர் முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இதில், குற்றம்சாட்டப்பட்டவர்கள், திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி சாந்தி முன்னிலையில், இன்று நேரில் ஆஜராகினர். இதில் சுந்தர், பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கடந்த மார்ச் மாதம், ஓய்வுபெறும் தினத்திற்கு முதல்நாள் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்ட வெளியே வந்த சுந்தரை படம்பிடித்த செய்தியாளர்களை, அவர் திடீரென தாக்கியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter