அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை முதல் ஆன்லைன் முறையில் பதிவு முறையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். பத்திரப்பதிவை எளிமைப்படுத்தும் வகையில் தமிழக அரசு ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை அமல்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 575 சார்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 7 ஆயிரம் பத்திரங்கள் வீதம் ஆண்டுக்கு 30 லட்சம் ஆவணங்கள் பதிவாகிறது.
பத்திரப்பதிவு செய்ய வரும் மக்கள் லஞ்சம் தரவில்லை என்றால் அவர்களை அதிகாரிகள் இழுக்கடிக்கிறார்கள் என அடிக்கடி புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
இதைதொடர்ந்து பதிவுத்துறை ஐஜிஆன்லைன் பத்திரப்பதிவு முறையை எளிமையாக்கும் வகையில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து பத்திரப்பதிவு முறையை ஆன்லைன் மூலம் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.
ஏற்கனவே, ஆன்லைன் பத்திரப்பதிவு முறை பெரும்பாலான அலுவலகங்களில் சோதனை முறையில் நடைபெற்றது.
இந்நிலையில், அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை முதல் ஆன்லைன் முறையில் பதிவு முறையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். பத்திரப்பதிவை எளிமைப்படுத்தும் வகையில் தமிழக அரசு ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை அமல்படுத்தியுள்ளது.