அதிராம்பட்டினம் பிப் 14
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அதிரை சுற்றுச் சூழல் மன்றம் 90.4 சார்பில் வருகிற(17/02/2018) அன்று காலை 09:00மணிமுதல் மதியம் 12:00மணிவரை பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் பற்றிய கருத்தரங்கம் சாரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் சுற்றுச் சூழல் மன்றம் 90.4ன் செயலாளர் எம்.எஃப்.முகமது சலீம் அவர்கள் வரவேற்புரை ஆற்ற உள்ளார்.
இக்கருத்தரங்கினை தலைமையேற்று துவக்கி வைத்து பேருரையாற்ற பட்டுகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் C.V.சேகர் அவர்கள் வருகை தரஉள்ளார்.
“பிளாஸ்டிக் கழிவினால் ஏற்படும் நோய்கள்” என்ற தலைப்பில் அதிரை அரசு மருத்துவமனை தலைமை அலுவலர் டாக்டர்.அ.அன்பழகன் அவர்கள் உரையாற்றுகிறார்.
இக்கருதருத்தரங்கில் முனைவர்.சி.சிவசுப்பிரமணியன்(துணை தலைவர், சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை,தமிழ் பல்கலை கழகம் ,தஞ்சாவூர்) அவர்கள் “பிளாஸ்டிக் கழிவினால் ஏற்படும் பிரச்சனைகள்” என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்.
அதிரை பேரூராட்சி துப்புறவு ஆய்வாளர் கே.அன்பரசன் அவர்கள் “பிளாஸ்டிக் கழிவுகளும் திடக்கழிவு மேலாண்மையும்” என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
இந்நிகழ்வில் பேரா.கா.செய்யது அகமது கபீர்(ஒருங்கிணைப்பாளர், சுற்றுச் சூழல் மன்றம்90.4) அவர்கள் ஒருங்கிணைப்பு மற்றும் அறிக்கை அளித்தல் போன்றவற்றில் ஈடுபட உள்ளார்.
இக்கருத்தரங்கத்தின் இறுதியாக நன்றி உரை எம்.முத்து குமரன்(பொருளாளர், சுற்றுச் சூழல் மன்றம் 90.4) நிகழ்த்த உள்ளார்.
பிளாஸ்டிக் கழிவினால் ஏற்படும் தீமைகள் பற்றி சுற்றுச் சூழல் அறிஞர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருப்பதினால் இந்த நல்ல வாய்ப்பினை அதிரையர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு சுற்றுச் சூழல் மன்றம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.