Sunday, July 20, 2025

மான தமிழனின் மனக்குமுறல் வெளிப்பாடு..

spot_imgspot_imgspot_imgspot_img

ஏரியை அழித்து
கல்லூரியை கட்டியாச்சு..

குளத்தை அழித்து
கம்பெனி கட்டியாச்சு …

வயக்காட்டை அழிச்சு
வீடு கட்டியாச்சு

தவறு எல்லாம்
மக்களாகிய நம் மீது தானே
தவிர..

அடுத்தவன் மீது இல்லை

துட்டுக்கு ஒட்டு போட்டது யாரு

இலவசத்துக்கு பல்ல
காட்டுனது யாரு…

நீர்வளத்தை
மணல் வளத்தை
காடுகளை
அழித்த போது
வேடிக்கை பார்த்தது யாரு..

உன்னால் இன்று
நெஞ்சை நிமிர்த்தி
நம்ம அரசியல்வாதியிடம்
நம்ம பிரச்சினையை
சொல்ல முடியுமா?
கேட்க முடியுமா?

முல்லையில் தண்ணீர்
கேட்டால்
கர்நாடக காரன் அடிக்கிறான்..

செம்மரம் வெட்டுறானு
ஆந்திராகாரன் அடிக்கிறான்

தீவிரவாதி இனம்னு
இலங்கை காரன் அடிக்கிறான்.

தமிழனை எங்கு அடித்தாலும்
தமிழ் நாட்டுக்காரன்
வேடிக்கை மட்டும் தான்
பார்க்கிறான்..

முல்லையில் வந்த
தண்ணீரை
நாம் சேமிக்கவில்லை..

காவேரியில் வந்த
தண்ணீரை
சேமிக்கவில்லை.

காமராஜர் ஆட்சிக்கு பிறகு
அணையேதும் கட்டவில்லை..

குலமேதும் வெட்டவில்லை..

கோலா காரனுக்கு
போதுமான தண்ணீர்
கிடைக்குது..

குடிகாரனுக்கு போதுமான
தண்ணீர் கிடைக்குது..

ஆனால்
விவசாயத்திற்கு மட்டும்
தண்ணீர் கிடைக்கவில்லை.

தமிழக அரசிடம்
தமிழக தன்மான மக்களே

முதலில் தமிழகத்தில்
அணை கட்ட சொல்லுங்க..

நதியை இணைக்க
சொல்லுங்க

இதை செய்றவனுக்கு
ஓட்டு போடுங்க..

வீரத்தையும்,
விருந்தோம்பலையும்
உலகிற்கு கற்று கொடுத்த
இனம், தண்ணீருக்காக
பிச்சை எடுக்கிறது.

இன்று

மாறுங்கள் மண்ணின்
மைந்தர்களே..

தன்மான தமிழர்களே
சூடும், சொரனையும்
நிறை கொண்டு வாழும் இனமே..

மாறுங்கள் இல்லையென்றால்
தமிழினம் என்ற இனம்
எங்கே என்று
தேடவேண்டி வரும்.

படித்ததில் பிடித்தது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம்...

அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி...
spot_imgspot_imgspot_imgspot_img