52
அமீரக கீழத்தெரு முஹல்லா அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு
அமீரகம் வாழ் அதிராம்பட்டினம் கீழத்தெரு முஹல்லா அமைப்பின் ஆலோசனைக்கூட்டம் துபையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்தில், அமீரக கீழத்தெரு முஹல்லா அமைப்பிற்கு புதிதாக நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், தலைவராக எல்.எம்.ஐ அப்பாஸ், செயலராக நஜ்முதீன், பொருளாளராக அ.முகம்மது அஷ்ரப் , துணைத் தலைவராக ஜே.பகுருதீன், துணைச் செயலராக D.S நிஜாம், துணைப் பொருளாளராக பிஸ்மில்லாகான் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில், அமீரக வாழ் கீழத்தெரு முஹல்லா இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.