Home » டிடிவி தினகரனின் கோரிக்கையினை நிராகரித்த தேர்தல் ஆணையம்..!!

டிடிவி தினகரனின் கோரிக்கையினை நிராகரித்த தேர்தல் ஆணையம்..!!

0 comment

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் உட்பட எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்த குக்கர் சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி.தினகரன் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது இது குறித்து தேர்தல் ஆணையம், “டிடிவி.தினகரன் தனியாக கட்சி எதுவும் தொடங்கவில்லை. அவர் அதிமுகவின் தனி அணியும் கிடையாது. மேலும் அவர் கட்சி சம்பந்தமாக எந்த ஒரு பெயரையும் தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவில்லை. அப்படி இருக்கையில் இடைத்தேர்தலில் கொடுக்கப்பட்ட குக்கர் சின்னத்தை தினகரன் எப்படி கேட்க முடியும்” என்று கூறினர். இதையடுத்து ஈபிஎஸ் தரப்பில் ஆஜரான முன்னாள் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரும், தினகரனின் மனுவினை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றே கேட்டுக்கொண்டதால்.

இதனையடுத்து தினகரன் சார்பில், “எங்களது தரப்பில் கடந்த 15ம் தேதி தாக்கல் செய்த 3 கட்சியின் பெயரை போலியான நபர்களை கொண்டு எதிர் அணியான முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அதே கட்சியின் பெயரை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தை அணுக முயற்சிக்கின்றனர்.

“இதனை நீதிமன்றம் கருத்தில் கொண்டு போலியாக பதிவு செய்பவர்களை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று கூறப்பட்டது. இதனையடுத்து நீதிபதி இந்த வழக்கினை வருகிற திங்கட்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter