71
தஞ்சை மாவட்டம்,
பட்டுக்கோட்டை பாலகிருஷ்ணா தனியார் மருத்துவமனையின் இரத்த வங்கி மற்றும் மனோர பாலிடேக்னிக் கல்லூரி ஆகியவை இணைந்து இன்று(21/02/2018) மாபெரும் இரத்த தான முகாமை கல்லூரி வளாகத்தில் நடத்தினர்.
இம்முகாமில், கல்லூரியில் பயின்று வரும் 18வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பலர் 40யூனிட் வரை இரத்த தானம் செய்தனர்.
இம்முகாமில்,மனோர பாலிடேக்னிக் கல்லூரியின் தாளாளர்.I. நாடிமுத்து, கல்லூரி முதல்வர் சரவணன், கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டத்தின் அலுவலர் அருண் மற்றும் பாலகிருஷ்ணா மருத்துவமனையின் இரத்த வங்கி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.