Home » ஜெயலலிதா சிலை தானா..? நெட்டிசன்கள் ஆதங்கம்..!!

ஜெயலலிதா சிலை தானா..? நெட்டிசன்கள் ஆதங்கம்..!!

0 comment

அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலை குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆதங்க கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலை திறக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து இந்தச் சிலையை திறந்து வைத்திருக்கின்றனர். 7 அடி உயரம் கொண்டதாக இந்த சிலை அமைந்துள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்கெனவே அதன் நிறுவனர் எம்ஜிஆருக்கு சிலை உண்டு. அதன் அருகேதான் தற்போது ஜெயலலிதாவுக்கும் சிலை திறக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வெண்கல சிலையை பிரசாத் என்பவர்தான் வடிவமைத்திருந்தார்.

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலை குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆதங்க கருத்தை பதிவு செய்து வருகின்றனர். திறக்கப்பட்டது ஜெயலலிதா சிலை போன்றே இல்லை என பலரும் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

ஜெயலலிதாவின் சிலையை திறப்பதற்கு பதிலாக முன்னாள் அமைச்சர் வளர்மதியின் சிலையை திறந்திருப்பதாக ஒருவர் விமர்சனம் செய்துள்ளார். மற்றொருவரோ ஜெயலலிதாவின் முகத்தையே மாற்றிவிட்டார்கள். தயவுசெய்து சிலையில் ஜெயலலிதா என எழுதி ஒட்டவும் என தெரிவித்துள்ளார்.

மற்றொரு நபரோ இது ஜெயலலிதாவா…? அல்லது சசிகலாவா என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஜெயலலிதாவின் சிலை குறித்த விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் அனலாக பறக்கிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter