தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் , பட்டுகோட்டை போன்ற இடங்களில் அகல ரயில் பாதை அமைக்கும் பணி ஒரு வருடத்திற்கு முன்பு துவங்கப்பட்டது.
இந்நிலையில்,முதற்கட்டமாக பட்டுக்கோட்டையையில் ரயில் நிலையம் மற்றும் அகல ரயில் பாதை அமைக்கும் பணி இரு மாதங்களுக்கு முன்பு முடிவுபெற்றது.
இந்நிலையில் , பட்டுகோட்டை -காரைக்குடி வரை செல்ல அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிற பிப் 27,28 மற்றும் மார்ச் மாதத்தில் ரயில் ஆய்வு ஓட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில்,இன்னும் ஓரிரு மாதங்களிலோ பட்டுகோட்டை முதல் காரைக்குடி வரை ரயில் பயணம் துவங்க உள்ள நிலையில் பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து, விரைவில் பட்டுகோட்டை-தஞ்சாவூர் செல்ல ரயில் வழிதடங்கள் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
அதேபோல், பட்டுக்கோட்டையை அருகே உள்ள அதிராம்பட்டினதிலும் தற்பொழுது ரயில் நிலையம் கட்டுமான பணிகள் துவங்கி தற்பொழுது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.