தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை தெருவுக்கு உட்பட்ட செயல்படுகிறது தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம்.
இந்த மன்றத்தின் சார்பில் கடற்கரை தெரு பகுதியில் பல இடங்களில் குப்பைகூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது.
கடற்கரை தெருவில் சுமார் நான்காயிரதிற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த கடற்கரை தெரு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பால்வாடி கூடம், பள்ளிவாசல் ஆகியவை செயல்பட்டு வருகிறது.
ஆனால் இப்பகுதியின் அடிப்படை தேவையான சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது.குடிநீர் சேகரிப்பு தொட்டியும் போதுமான அளவு இல்லாததால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
ஆகவே இதனை ஆய்வு செய்து, பரிசீலனை செய்து சீரமைத்து தரகோரி பட்டுகோட்டை சட்டமன்ற உறுப்பினர் C.V.சேகர் அவர்களை மன்றத்தின் நேரில் சென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரிக்கைகள்:-
1). ஆறுமாங்கட்டி தெருவில் இருந்து கடற்கரை தெரு நுழைவு வாயில் முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வரை சாலை அமைத்து தர கோரியும்.
2). கடற்கரை தெருவில் 4500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயணடையும் வகையில் குடிநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து தர கோரியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.