Home » அதிரையில் துருப்பிடித்த மின்கம்பங்களை மாற்ற கோரிக்கை விடுத்துள்ள சமூக ஆர்வலர் ஹாலிக் அவர்கள்..!

அதிரையில் துருப்பிடித்த மின்கம்பங்களை மாற்ற கோரிக்கை விடுத்துள்ள சமூக ஆர்வலர் ஹாலிக் அவர்கள்..!

0 comment

சமூக சேவகரின் மகத்தான பணி..

தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினத்தில் பல இடங்களில் குறிப்பாக கடற்கரை தெரு தர்கா மற்றும் புதுமனை தெரு, செக்கடி பள்ளி (மசூதி) பின்புறம் உள்ள மின்கம்பம் எண் 948 ஆகிய இரு மின் கம்பங்கள் மேல்பாகம் முதல் கீழ்ப்பாகம் வரை துருப்பிடித்த நிலையில் உள்ளது.இதனை மின்வாரிய துறையும் சரியான முறையில் கண்டுகொள்வதும் இல்லை.
இந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் அறுந்து விழுந்து உயிர் சேதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, இதனை கருத்தில் கொண்டு அதிரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஹாலிக் அவர்கள் மின்வாரிய துறை பட்டுக்கோட்டை முகாமில் இந்த மின்கம்பங்களை மாற்றி தருமாரு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த இரு மின்கம்பங்களை மாற்றி அமைக்கப்படுமா..?

சமூக சேவகர் அப்துல் காலிக் (மரைக்கா) அவர்கள் தன் உடல் நிலையையும் பொருட் படுத்தாமல் பட்டுக்கோட்டை பாளயம் மின் பொறியாளர் அலுவலகத்தில் (22/02/2018) வியாழக் கிழமை நடந்த மின் நுகர்வோர் குறைத் தீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தவை குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter