அதிரை எக்ஸ்பிரஸ்:- சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிறப்பட்டும் மக்களிடையே பேசப்பட்டு வரும் செய்தி சிரியா மக்களின் நிலை மற்றும் அங்கு வாழும் குழந்தைகள் அந்நியாயமான முறையில் கொள்ளப்படுவதுமே ஆகும்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களான முகநூலில் பலர் I SUPPORT SYRIA PEOPLES என்ற வார்த்தையையும் அதிகமாக பயன்படுத்தி தங்களின் ஆதரவை தெருவித்து வருகின்றனர்.
பலர் தமிழகத்தில் இருந்து கொண்டு என்ன செய்வது என்றும் தெரியாமல் போராடி வருகின்றனர்.
இந்நிலையில்,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்(தமுமுக) சார்பில் நாளை மறுநாள் புதன்கிழமை (28/02/2018) அன்று சிரியா மக்களின் இந்நிலைக்கு காரணமான ரஷ்ய தூதரத்தை முற்றுகை இடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.