அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயம் என்றாகி வரும் நிலையில் தற்போது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தனி ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின்படி 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நீல வண்ணத்தில் ஆதார் அட்டை வழங்கப்பட உள்ளது. மேலும் அவர்களுக்கு பயோ மெட்ரிக் தகவல்கள் தேவையில்லை. 5 வயதுக்கு மேல், அந்த ஆதார் கார்டில் அவர்களது பயோமெட்ரிக் தகவல்களை ஆதாருடன் இணைக்க வேண்டும் . அதே சமயம் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கோ, அரசின் கல்விச்சலுகையை பெறுவதற்கோ ஆதாரை பதிவு செய்ய வேண்டும்என்ற கட்டாயமில்லை. குழந்தையின் 5, 10, 15 வயதுகளில் அவரின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பள்ளி அடையாள சான்றுடன், பயோமெட்ரிக் தகவல்களையும் இணைக்க வேண்டியது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தனி ஆதார் கார்டு- மத்திய அரசு திட்டம்
189
previous post