95
சவுதி அரேபியாவின் ராணுவ தலைமைத் தளபதிகள் மற்றும் சில அமைச்சர்களை நீக்கியும், இலாகா மாற்றம் செய்தும் மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.
ராணுவ தலைமை தளபதி அப்துல் ரஹ்மான் பின் சாலே அல்-பன்யானை நீக்கம் செய்ததுடன், உயர் மட்ட அதிகாரிகள் பலரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. ராணுவ உயர் அதிகாரிகள் சிலர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இளவசரான முகமது பின் சல்மானின் அறிவுரைப்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பதவி நீக்கம் மற்றும் இலாகா மாற்றங்களுக்கான காரணம் தற்போது வரை அறியப்படவில்லை. ஏமனில் மூன்று ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்களுடனான போரில் வெற்றி பெற முடியாததே இதற்கு காரணமாக கருதப்படுகிறது.