240
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் ரஷ்ய அரசை கண்டித்து சென்னையில் உள்ள ரஷ்யா நாட்டின் துணை தூதரகத்தை வருகிற மார்ச் 3ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகம் மற்றும் புதுவை மாவட்டங்களில் மார்ச் 1 முதல் 5ஆம் தேதி வரை மாவட்ட தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களிலும் மஜக சார்பிக் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், ரஷ்யாவை கண்டித்து கண்டன சுவரொட்டிகளும் ஒட்டப்படும் என தகவல் வெளியிட்டுள்ளனர்.