Home » அதிரையர்களே உஷார்., ஊரை சுற்றித்திரியும் ATM கொள்ளையர்கள்..!

அதிரையர்களே உஷார்., ஊரை சுற்றித்திரியும் ATM கொள்ளையர்கள்..!

0 comment

தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் பகுதியில் பலர் வங்கி கணக்கு வைத்துள்ளனர்.அவரவர் பணம் எடுப்பதற்கு இலகுவாக ATM கார்டுகளும் வைத்துள்ளனர்.

வெளிநாடுகளில் வேலைபார்க்கும் ஆண்கள் தங்கள் வீட்டுக்கு பணத்தை வங்கி கணக்கு மூலம் அனுப்புகின்றனர்.இந்த பணத்தை ATM மூலம் எடுக்க செல்லும் நமது வீட்டு பெண்கள் மற்றவர்களிடம் ATM கார்டை கொடுத்து பணம் எடுத்து கொடுங்கள் என்று கேட்கிறார்கள்.

இதனை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் சில கொள்ளை கும்பல் இஸ்லாமிய பெண்களை போல் பர்தா அணிந்து ATMயில் பணம் எடுத்து தங்களிடம் கொடுத்துவிட்டு , ATM கார்டையும் மாற்றி கொடுத்து விடுகின்றனர்.

இதனை அறியாத சிலர் வேறு பொய்யான ATM அட்டையை வாங்கிக்கொண்டு வீடு திரும்புகின்றனர்.

இதனை தொடர்ந்து, ATM அட்டையின் PIN முழுவதை அறிந்த அந்த கும்பல் நம் வங்கி கணக்கில் உள்ள பணத்தை சுருட்டிவிடுகின்றனர்.

இதனால் , அதிரையை சேர்ந்த அனைவரும் உஷாராக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முன்பே வெளியிட்ட அதிரை எக்ஸ்பிரஸ்:-

http://adiraixpress.com/அதிரையில்-நூதன-கொள்ளையர்/

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter