55
அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடிப்படை உறுப்பினரிலிருந்து அல்தாபி அதிரடி நீக்கம்.
கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் ஓரங்கட்டப்பட்ட அல்தாபி அவ்வப்போது முகநூலில் புகைப்படத்தை அவருடைய நலன் விரும்பிகள் பதிவார்கள்.எந்தவொரு பயான் நிகழ்ச்சியிலும் பங்கெடுக்கவில்லை.
ஏன் அல்தாபியை ஒதுக்குகிறார்கள் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்தது. குறிப்பாக ததஜவின் தொண்டர்கள் மத்தியில் தொடர்ந்து எழுந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் இன்று அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அல்தாபி அவர்களை அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கம் செய்துள்ளார் .இந்த நீக்கம் சமூக வலைதளத்தில் பெரும் விவாத பொருளாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.