இவ்வுலக வாழ்வில் இறை இல்லம் கட்டுவதற்கு பொருளாலோ அல்லது உடல் உழைப்பாலோ உதவி செய்பவருக்கு இறைவன் மறுவுலகில் பெரிய மாளிகையை கட்டுகிறான். அதன் அடிப்படையில் தான், இங்கு நமது கவனத்துக்கு கொண்டுவரப்படுகிறது..அதிரை நகரின் ரயில்வே பாதையை தாண்டி கடல் செல்லும் வழியில் அமைந்துள்ள மஸ்னி நகர் மஸ்ஜித். அந்த மஸ்ஜித் சிறு ஓலை குடிசையில் அமைந்துள்ளது. மின்சார இணைப்பு பெற்றுள்ள இப்பள்ளியில், இன்னும் தேவையான மின் சாதனம் பொறுத்த வேண்டியிருக்கிறது. உளு செய்வதற்கு தொட்டில் மற்றும் பைப் வசதி மேலும் கழிப்பிடம் மற்றும் அதற்கான மின்சார விளக்கு அமைக்கும் பனி அவசியமாகிறது. பள்ளியின் மேற்கூரை தென்னம் ஓலையில் அமைந்துள்ளதால் மழை மற்றும் சூறை காற்று போன்ற நேரங்களில் பாதுகாப்பு இருக்க வாய்ப்பில்லை. எனவே கூரையை பாதுகாப்பான ஸ்டீல் தகடுகளால் அமைக்கப்படுவது அவசியமாகிறது. இப்பள்ளியில் அனைத்து 5 வக்துகளிலும் தொழுகை நடப்பதற்கான சூழ்நிலையை அமைத்து கொடுக்க இது போன்ற சீரமைப்பு பணிகள் மிக அவசியமாகும். தற்சமயம் இப்பள்ளியின் இமாமாக பணி புரிந்து வருபவர் ஷேக் தாவூது மிஸ்பாஹி ஆவார். நல்ல மார்க்க பற்றும் அழகிய முறையில் குர் ஆன் ஓதும் இவர், மஸ்ஜித் அல் மஸ்னியின் சீரமைப்புக்கு நமதூர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறார். இவர் சொல்லாவிட்டாலும், நம் அனைவராலும் அறியப்படும் இந்த இறை இல்லம் மேலும் விரிவடைந்தால் அதன் பலன் இவ்வுலகில் மட்டும் இல்லாமல் மறுவுலகிலும் கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
சீரமைப்பு பணிக்காக காத்திருக்கும் இறை இல்லம் அதிரை “மஸ்ஜித் அல் மஸ்னி”
66
previous post