ஒருவார காலம் ஆகியும் வெள்ளம்புத்தூர் பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவன் கொலை விவகாரத்தில் இப்போது வரை யாரையும் கைது செய்ய முடியாமல் காவல்துறை திணறி வருகிறது. 34 பேர் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர். அதில் ஆந்திராவை சேர்ந்த 4 பேரும் அடக்கம்.
இதற்கு இடையில் வழக்கு தொடர்பான மருத்துவ அறிக்கையும் வெளிவந்துள்ளது. அதில் சிறுவனின் தாயின் கழுத்தில் வீட்டில் இருந்த இரும்புச் சட்டி அல்லது வேறு பாத்திரம் ஒன்றை எடுத்து வலுவாக அடித்தது தெரியவந்துள்ளது; குற்றவாளி மிகக் கொடூரமான நிலையில் சிறுமியை அணுகி பாலியல் வன்கொடுமை செய்ததையும் மருத்துவ அறிக்கை உறுதி செய்துள்ளது.
இதற்கிடையில் ஜிப்மரில் சிகிச்சை பெற்றுவரும் சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. தீவிர சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அனைத்து விதமான விசாரணைகளும் கைகொடுக்காமல் உள்ள நிலையில் சிறுமி மற்றும் அவரது தாயின் வாக்குமூலம் குற்றவாளியை பிடிக்க உதவலாம் என காவல்துறை நம்புகிறது.
இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற உடனேயே விசாரணையை தொடங்கியிருந்தால் குற்றவாளியை கைது செய்திருக்க முடியும் என பொதுமக்கள் கூறுகின்றனர். சம்பவம் நடந்ததும் உடனடியாக புகாரளிக்கப்பட்டும், பிரதமர் வருகையை காரணம் காட்டி காவல்துறை விசாரணையை முடுக்கிவிடவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
வெள்ளம்புத்தூர் அருகே உயிருக்கு போராடும் சிறுமி.. திணறும் காவல்துறையினர்…!!
30