131
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் வருகிற (09/03/2018)அன்று மாலை 6மணியளவில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில தலைவர் சீமான் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.
பட்டுகோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிரை கிளை சார்பில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கொள்கை விளக்க பொதுகூட்டத்திற்கு அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் , உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.