196
அதிராம்பட்டினம் EP மாடல் நர்சரி & பிரைமரி பள்ளி
17 வது ஆண்டு விழா நிகழ்ச்சி லாவண்யா திருமண மகாலில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளித் தாளாளர் ஜே. அமீன் நவாஸ்கான் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி நிறுவனர் ஜமீல் முஹம்மது சாலிஹ், காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் முகமது அப்துல் காதர்,வழக்கறிஞர் A.முனாஃப், பல் மருத்துவர் ஃபஜ்லுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கண்கவர் நிகழ்ச்சிகளும், பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.