Home » ஏர்செல்லை அடுத்து ஏர்டெல்…! வாடிக்கையாளர்களுக்கும் எச்சரிக்கை..??

ஏர்செல்லை அடுத்து ஏர்டெல்…! வாடிக்கையாளர்களுக்கும் எச்சரிக்கை..??

0 comment

ஏர்செல்லை அடுத்து ஏர்டெல்…! வாடிக்கையாளர்களுக்கு வார்னிங்..!

கடந்த இரண்டு வார காலமாக ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு டவர் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில் வேறு சேவைக்கு மாறுமாறு ஏர்செல் நிறுவனம் தெரிவித்து இருந்தது.

அதற்கான போர்ட் எண்ணும் அடுத்த இரண்டு நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு விடும் என தெரிவித்தார்.

ஏர்செல் நிறுவனத்தின் தென்மண்டல தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன்.

இந்நிலையில்,ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் அரசு வழங்கிய மானிய தொகையை தனது ஏர்டெல் பேமண்ட் வங்கியில் மாற்றி உள்ளது தெரிய வந்துள்ளது.

வங்கியில்,வாடிக்கையாளர்களை பற்றிய முழு விவரம் உள்ளடாங்கிய kyc பாரம் பூர்த்தி செய்யாமல்,அதாவது வாடிக்கையாளர்களின்அனுமதி இல்லாமல்,ஏர்டெல் பேமண்ட் வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது

 
 

ஆதார் மட்டும் பயன்படுத்தியது…..

கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிம்கார்டு விற்பனை செய்யும்போது அடையாள அட்டையாக ஆதார் நகலை பெற்றது.

அதனை பயன்படுத்தி ஏர்டெல் நிறுவனம், ஏர்டெல் பேமெண்ட் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து,தங்கள் பேமெண்ட் வங்கிக்கு மானிய தொகை வராததால்,சந்தேகம் அடைந்த வாடிக்கையாளர்கள் வங்கியில் புகார் செய்தனர்.

 
 

இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில்,23 லட்சம் வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் அவர்களது ரூ.47 கோடியை அபேஸ் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

வாடிக்கையாளர்களின் அனுமதி இல்லாமல்,ரூ.47 கோடியை ஏர்டெல் பயன்படுத்தியதால்,ரிசர்வ் வங்கி ஏர்டெல் பேமண்ட் வங்கிக்கு ரூ .5 கோடி அபராதம் விதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter