அதிரை எக்ஸ்பிரஸ்:- ஒவ்வொரு நாளும் சிறைவாசிகள் இன்னல்கள் படுவதும் அவர்களுடைய குடும்பத்தினர் கவலையடுவதும்,அந்த கவலை ஒவ்வொரு சக இஸ்லாமியனுக்கும் இருக்கத்தான் செய்கிறது.
இன்று இல்லை சிறைவாசிகள் போராட்டத்தில் இயக்கங்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுக்குள்ளாக தான் செய்யப்படுகிறது சிலரால்.
ஆனால் உண்மையையும்,துக்க நிகழ்வில் வரும் கோபத்தை அப்படியே இயக்கங்கள் மீது வீசுவது சரியா என்று சற்று நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.சிறைவாசிகள் பாதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் எவருக்கும்,எந்த இயக்க தலைமைக்கும் இருப்பதில்லை,அவர்களுக்கான விடுதலை பெற்று தருவதில் தான் உறுதியாக இருக்கின்றன.
எவ்வளவோ அழுத்தங்கள்,கோரிக்கைகள்,தனித்தோ அல்லது இயக்கங்கள் ஒன்றிணைந்த போராட்டங்கள்,கண்டன அறிக்கைகள்,அரசின் எத்தனையோ உறுதிமொழிகள் இஸ்லாமிய அமைப்புகள் மட்டும் தனிமைபட்டு விடக்கூடாது என்பதற்கு தமிழீழ அமைப்புகள்,இன்ன பிற அமைப்புகளை ஒருங்கிணைத்து தான் நடத்துகின்றன.
இவற்றையெல்லாம் இயக்கங்கள் நிகழ்த்திய நிகழ்வுகள் பல நேரங்களில் கண்ணை மறைத்து விடுகிறது.ஒவ்வொரு இயக்க மாநாடுகளில் சிறைவாசிகளின் விடுதலை என்று இல்லா தீர்மானம் இருக்காது.ஆகவே சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்துபோதும்,இருக்கின்ற போதும் சிறைவாசிகள் விடுதலை குறித்து அரசுக்கு அழுத்தமும்,கோரிக்கையும் கொண்டுதான் சேர்த்தன.
சீசன் போராட்டம் என்று நாம் எளிதில் சொல்லிவிடலாம்,எழுதிவிடலாம் ஒவ்வொரு பிரச்சனைக்கும் இயக்க எதிர்ப்பு,போராட்டமும் இல்லையென்றால் எதிர்ப்பில்லாமல் சில நிகழ்வுகள் நடக்கும்,அதே சமயம் எவ்வளவோ எதிர்ப்பும் இருந்தாலும் எளிதில் சட்டங்களை அயோக்கிய அரசுகள் அரங்கேற்ற தான் செய்கின்றன…
அதேசமயம் நாம் முகநூலில் சீசன் போராட்டங்கள் நடத்திய நிகழ்வையும் மறந்துவிடக்கூடாது..
குறைகளை எளிதில் சொல்லிவிடலாம், அவர்களின்(இயக்கங்களின்) போராட்டத்தை ஒருபோதும் கொச்சைப்படுத்தாதீர்கள்……