347
இன்று மாலை திடீரென புழுதி புயல் வீசியதோடு மழையும் பெய்தது. அப்போது வானம் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது.
குவைத் நாடு தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடாகும். பாலைவனப் பகுதியாக உள்ள இந்நாட்டில் தமிழர்கள் உட்பட உலகின் பலப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் பணி நிமித்தமாக வசித்து வருகின்றனர்.
குவைத்திற்கும் இந்தியாவுக்கும் சுமார் இரண்டரை மணி நேரம் வித்தியாசம் உள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் குவைத்தில் திடீரென புழுதிப்புயல் வீசியது.
இதைத்தொடர்ந்து வானம் திடீரென இருண்டு செந்நிறமாக காட்சியளித்தது. மேலும் இடி மின்னலுடன் லேசான மழையும் பெய்தது.
திடீரென மாறிய வானிலையால் மக்கள் திகைத்தனர்.