இந்த நிலையில் திரையுலகினர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இவர்களை பிடித்தே தீருவேன் என்று விஷால் சபதமிட்ட நிலையில் ஒருவழியாக நேற்று கூண்டோடு மாட்டிவிட்டனர்.
நேற்று தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் 5 பேரை கேரள கிரைம் பிரான்ச் ஆண்டி பைரசி செல் சூப்பர்டென்ட் B.K. பிரஷாந்த் காணி தலைமையிலான குழு நேற்று திருநெல்வேலியில்
சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தது.
கைது செய்யப்பட்ட ஐந்து பேர் இவர்கள் தான்:
1. கார்த்தி வயது 24 ( விழுப்புரம் )
2. சுரேஷ் வயது 24
3. TN Rockers பிரபு வயது 24
4. DVD Rockers ஜான்சன் வயது 30 ( திருநெல்வேலி )
5. மரிய ஜான் வயது 22.
இவர்கள் Tamil Rockers.IN , Tamil Rockers.AC , Tamil Rockers.NE , Tamil Rockers.CO , Tamil Rockers.IS , Tamil Rockers.US , Tamil Rockers.RO போன்ற 19 Domainகளை பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து இனியாவது திரையுலகிற்கு விடிவுகாலம் பிறக்குமா? அல்லது இன்னும் மிச்சம் மீதி அட்மின்கள் இருக்கின்றார்களா? என்பது இனிமேல்தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.