பெங்களூரு: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெங்களூரு எப்சி அணியை 3 – 2 என்ற கணக்கில் வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டதை வென்றுள்ளது. அபாரமாக விளையாடிய சென்னை அணியின் மைல்சன் 17 மற்றும் 45 நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினார். பின்னர் கடைசியில் ஒரு கோல் அடித்து சென்னை அணி 3- 2 என்ற கணக்கில் சாம்பியன் பட்டதை வென்று அசத்தியது.
ஐஎஸ்எல் வரலாற்றில் இரண்டாவது முறையாக சென்னை அணி சாம்பியன் பட்டதை வென்று அசத்தியுள்ளது. முன்னதாக கடந்த 2015ல் இரண்டாவது ஐஎஸ்எல் தொடரில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டதை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. ஐஎஸ்எல் வரலாற்றிலே சென்னை அணி இதுவரை இருமுறை கோப்பையைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.