Home » தமிழ்சொந்தங்களுக்கு எஸ்டிபிஐ தலைவரின் பாசிசத்திற்கு எதிரான அழைப்பு!!

தமிழ்சொந்தங்களுக்கு எஸ்டிபிஐ தலைவரின் பாசிசத்திற்கு எதிரான அழைப்பு!!

by admin
0 comment

அன்பான தமிழ் சொந்தங்களே…

ராம ராஜ்ய ரத யாத்திரையை தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி நாளை தமிழக கேரள எல்லை பகுதியான செங்கோட்டையில் ராம ராஜ்ய ரத யாத்திரையை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழகத்தில் உள்ள மதசார்பற்ற சக்திகள் அனைவரும் ஒன்றினைந்து அறிவித்திருந்தோம். இந்த நிலையில் இந்த முற்றுகை போராட்டத்தை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு செங்கோட்டை சுற்றிவட்டார பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் காவல்துறையினரின் நெருக்கடிகள் அந்த பகுதியில் துவங்கி இருக்கிறது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள செல்லும் தலைவர்களை கைது செய்யும் நடவடிக்கை ஆங்காங்கே நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் அவர்கள் செங்கல்பட்டு இரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையின் இந்த அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறேன். 144 தடை ஆணை என்றால் அது ராமராஜ்ய ரத யாத்திரைக்கும் பொருந்த வேண்டும் தானே அப்படி என்றால் தமிழக எல்லைக்குள் நுழையும் ராம ராஜ்ய ரத யாத்திரையை காவல்துறை நாளை தடுக்க வேண்டும்.

எது எப்படி இருப்பினும் மீதமுள்ள தலைவர்கள் நாளை செங்கோட்டையில் முற்றுகைப்போராட்டத்திற்கு தலைமை ஏற்பார்கள். நாம் ஏற்கனவே திட்டமிட்டதைவிட ஆயிரக்கணக்கில் செங்கோட்டையில் அணி திரள்வோம். தடைகளை உடைத்து ஆர்ப்பரிப்போம். இது உத்திர பிரதேசம் அல்ல தமிழ்நாடு என்பதை சங்க பரிவார சக்திகளுக்கு உணர்த்துவோம். தமிழக மண்ணில் ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்த பயங்கரவாதிகளுக்கு இடமில்லை என்பதை மொத்த இந்தியாவிற்கும் உணர்த்துவோம். இறைவன் நாடினால் நாளை செங்கோட்டையில் முற்றுகைப்போராட்ட களத்தில் சந்திப்போம்.

தோழர்கள் யாவரும் தடை ஆணை மற்றும் காவல்துறையின் நெருக்கடிகள் என்று யாரும் கலங்கவேண்டிய தேவை இல்லை. போராளிகளை காவல்துறையினுடைய இந்த பூச்சாண்டி எந்த விதத்திலும் முடக்காது. எனவே எந்த தயக்கமும் இன்றி நீங்கள் செங்கோட்டையை நோக்கி திரண்டு வாருங்கள். திட்டமிட்டபடி இறையருளால் முற்றுகைப்போராட்டம் வெற்றிகரமாக நடைபெறும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter