Home » தமிழகத்தை உலுக்கிவரும் ரதயாத்திரை எதிர்ப்பு போராட்டம்!!

தமிழகத்தை உலுக்கிவரும் ரதயாத்திரை எதிர்ப்பு போராட்டம்!!

0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் திமுக மற்றும் விடுதலை கட்சியினர் சாலை மறியல்.

தமிழகத்தில் விஎச்பி அமைப்பினர் பல்வேறு சர்ச்சையான கோரிக்கைகளை வலியுறுத்தி ரத யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இன்று இந்த ரத யாத்திரை தமிழகத்திற்கு வருவதை கண்டித்து செங்கோட்டை நோக்கி பல்வேறு அமைப்பு,கட்சி தலைவர்கள் செல்லும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.மேலும் இன்று சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்டனத்தை பதிவு செய்து வெளிநடப்பு செய்தார்.அவர் சாலைமறியலிலும் ஈடுபட்டார்.இதன் காரணமாக காவல்துறையினர் ஸ்டாலினை கைது செய்தனர்.

இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சியினர் தத்தமது இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்துவருகின்றனர்.இதன்தொடர்ச்சியாக தஞ்சை மாவட்டம் முழுவதும் குறிப்பாக பட்டுக்கோட்டையில் சாலை மறியல் செய்து வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter