தமிழகம் முழுவதும் பல இடங்களில் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் சாலை மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 144 தடையை மீறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செங்கோட்டை பகுதிக்கு சென்றார். தலைவர்கள் பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்ட நிலையில் போலீசார் கண்ணில் மண்ணை தூவி சீமான் செங்கோட்டைக்கு வந்தார்.
சீமான்விஎச்பி ரத யாத்திரையை தடுக்க சீமான் தலைமையில் ஏராளமானோர் குவிந்து போராட்டம் நடத்தினர். வி.எச்.பி. ரத யாத்திரையை முற்றுகையிட முயன்ற சீமானை போலீசார் கைது செய்தனர். சீமானுடன் போராட்டம் நடத்திய அதிரை நிர்வாகிகளும் மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர் மற்றும் 1000க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.