59
அதிரை எக்ஸ்பிரஸ்;- தஞ்சாவூர் மாவட்டம் அதிரம்பட்டினத்தில் அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம் சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் காலம் தொடங்கி பொதுமக்களை கடுமையாக வாட்டி வருகிறது. இந்நிலையில் அதிரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் வெயில் அபாயத்தை கட்டுப்படுத்த பொது மக்களுக்கு மோர் வழங்கி பொதுமக்களின் தாகத்தை போக்கி வருகிறார்கள்.
அதிரை சேர்மன்வாடி MST டிரெடர்ஸ் எதிரே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தலும் அமைத்துள்ளனர். இதில் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழக 21வது வார்டு செயலாளர் MST.சிராஜுதீன் அவர்கள் பொது மக்களுக்கு மோர் வழங்கினார்.