Home » அதிரைக்கு குர்ஆன் மாநாடு அவசியமா….?

அதிரைக்கு குர்ஆன் மாநாடு அவசியமா….?

by Admin
0 comment

அதிரையில் இயங்கிவரும் பைத்துல்மால் தொண்டு நிறுவனத்தின் சார்பில் பல்வேறு நலதிட்ட உதவிகளை பொதுமக்களின் பொருளாதார உதவியுடன் செம்மையாக செய்து வருகிறனர்.

இந்நிலையில் பைத்துல்மாலின் சார்பில் குர்ஆன் மாநாடு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றது.

மேலும் இது பயனற்ற வேலை என்றும், அதிரையில் உள்ள சிலர் வட்டியின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர் என்றும், அவர்களை முழுமையாக மீட்காமலும், முதியோர், ஏழை மக்களை வதைக்கு உள்ளாக்கும் வருமையில் இருந்து மக்களை விடுவிக்கவும் இந்த மக்கள் இயக்கம் முழுமையான முறையில் பங்காற்ற வேண்டும் என பொது மக்களின் எண்ணமாக உள்ளன.

இது குறித்து பைத்துல்மாலின் குர்ஆன் மாநாட்டு குழுவில் இடம்பெற்றுள்ள ஒருவர் நமது அதிரைஎஎக்ஸ்பிரஸ் நிருபரிடம் கூறியதாவது,

அதிரை பைத்துல்மால் சார்பில் நடத்தும் இக்குர்ஆன் மாநாடு பைத்துல்மாலின் பணியல்ல எனவும் இதற்கு பொது நிருவன நிதியில் இருந்து பணம் எடுப்பது இல்லை என தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர் இதற்கென தனியார்களிடம் இருந்து ஸ்பான்சர்(நன்கொடை) பெற்று நடந்து வருவதால் இது அதிரைக்கு தேவையான ஒன்றாகும் என்றார்…

சமூக ஆர்வலர் ஒருவர் நம்மிடம் கூறுகையில், ஊரில் என்னற்ற பள்ளிவாசல்கள் பராமரிப்பு இன்றி இமாம் முஅத்தீன்களுக்கு ஊதியம் கொடுப்பது மின்கட்டனம் செலுத்துவதே சிரமப்பட்டு வரும் சூழலில் இது போன்ற குர்ஆன் மாநாடு தேவையற்றவை என கூறினார்.

பைத்துல்மாலின் நிர்வாகிகளின் பெரும்பாலானோர் இதனை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ள நிலையில், அவர்களை தவிர்த்து இந்த நிலைப்பாட்டை பைத்துல்மால் நிர்வாகம் எடுத்துள்ளதாக தெரிகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter