இந்நூற்றாண்டு துவக்கம் முதலே, தகவல் தொழிலநுட்ப வளர்ச்சியானது அதிவேகத்தில் வளர்ந்து வருகிறது. கம்ப்யூட்டர், ரோபாட் மற்றும் மின்னணுத் துறை வேகமாகப்பயன்பாட்டிற்கு வந்து கொண்டுள்ளது. எதிர்வரும் காலத்தில் இந்த தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சியே ஏற்பட வாய்ப்பு உள்ளது.
வளர்ச்சியின் வேகத்தோடு பயணிக்கும் நாம், நம் வாழ்வின் பல துறைகளிலும் நமது சொந்த வாழ்வினிலும் பற்பல கருவிகள் நம் வாழ்வின் அங்கமாக ஆகி வருகிறது. ஆரம்பம் முதலே நம் அதிரையர்கள் வளரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பல நவீன தொழில்நுட்பம் சார்ந்த தளங்களை பயன்படுத்துவதிலும், அவைகளை பொதுவெளிகளில் பயன்படுத்துவதிலும் முன்னோடியாக உள்ளனர் என்பதில் இருவேறு கருத்து இருக்கமுடியாது.
அந்த வகையில், IT துறையில் பணியாற்றும் ஹனீஃப், ஷஃபி மற்றும் சுஹைல் ஆகியோரின் முயற்சியில் மருத்துவம ஆலோசனை பெரும் ஒரு இணைய தளத்தினை அறிமுகம் செய்யவுள்ளனர்.மேலும் இச்சேவையை ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளத்தில் இயங்கும் செயலியின் மூலமும் மருத்துவர்களை 24/7 மணி நேரமும் தொடர்புகொள்ளும் வசதி உள்ளது.
டெலிமெடிஸின் (Telemedicine) என்றழைக்கப்படும் இச்சேவை வளர்ந்த நாடுகளில் பிரபலமடைந்துவரும் நிலையில், இந்தியா போன்ற நாடுகளில் வெகு சில தனியார் மருத்துவமனைகளில் இச்சேவை பயன்பாட்டில் உள்ளது.
இச்சேவை குறித்து அவர்கள் கூறும்போது, “இச்சேவை உள்ளூர் மற்றும் வெளியூர்/வெளிநாடுகளில் வசிக்கும் நமதூர் மக்களின் நலன் கருதி ஆரம்பிக்கப்படவுள்ளது. நமதூர் மருத்துவர்களை வெளியூர்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் தொடர்புகொண்டு மருத்துவ ஆலோசனை பெறலாம். இதில் தற்போதைக்கு 3 மருத்துவர்கள் இணைப்பில் இருப்பர். (Dr Sheik Ali (குழந்தைகள் நலம்), Dr Fazlur Rahman (பல் மருத்துவ நிபுணர்) மற்றும் Dr Shafiudeen (எலும்பு) விரைவில் இன்னும் கூடுதலான மருத்துவர்கள் இணைக்கப்படுவர்.
இணையதளம் மூலமோ, செயலின் வழியாகவோ, மருத்துவரை அவர்கள் நிர்ணயித்த கட்டணம் செலுத்தி வீடியோ கானபெரென்ஸ் அல்லது சாதாரண தொலைபேசி/ஆடியோ கானபெரென்ஸ் மூலமாகவோ தொடர்பு கொள்ளும் வசதி உள்ளது.
இத்தளம் பொதுமக்களின் சேவைக்கு விரைவில் வெளியாகும். இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்தவுடன் இச்சேவை வெளியாகும் நாள் அறிவிக்கப்படும் இன்ஷால்லாஹ்.
மேலும், இதுகுறித்த மேலதிக தகவலுக்கு +91-7708614041 என்ற எண்ணிற்கு ஷஃபி அவர்களை தொடர்புகொள்ளவும்.