Home » ஸ்டெர்லைட் ஆலையில் பணம் பெற்ற அரசியல்வாதிகள் குறித்து புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும்..!       

ஸ்டெர்லைட் ஆலையில் பணம் பெற்ற அரசியல்வாதிகள் குறித்து புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும்..!       

0 comment

தூத்துக்குடி.ஏப்.01., இன்று தூத்துக்குடி வருகை தந்த மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றார். 

49வது நாளான இன்று , நூற்றுக்கும் மேற்பட்ட மஜகவினருடன் சென்று போராட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது.

மண்ணுரிமைக்காகவும், மக்கள் உரிமைக்காகவும் போராடும் உங்களுக்கு எமது புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். மக்களையும், மண்ணையும் காப்பதற்காக நீங்கள் போராடுகிறீர்கள். 

நமது நிலத்தையும், நீரையும், காற்றையும் கார்ப்பரேட் கம்பெனிகள் விலை பேசுகிறார்கள், இனியும் அதை அனுமதிக்க கூடாது. 

ஸ்டெர்லைட் ஆலையில் பணம் பெற்ற கட்சிகள் குறித்தும்,  அரசியல்வாதிகள் குறித்தும் புலன் விசாரணை நடத்த வேண்டும். பெரும்பாலான அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் விலைபோய் இருக்கிறார்கள். 

உங்களின் போராட்ட உணர்வுகளை கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் சட்டமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வருவேன் (பலத்த கைத்தட்டல்..) உங்களின் போராட்டத்திற்கு மஜக துணை நிற்கும் என்று உறுதி கூறுகிறேன்.

இவ்வாறு அவர் பேசி முடித்ததும் போராட்ட ஒருங்கிணைப்பாளர் எழுந்து, இந்த போராட்டத்திற்கு வருகை தந்த முதல் MLA நீங்கள் தான் என்று நன்றி கூறினார். ஊர்மக்களும் அந்த கருத்தை வரவேற்றனர்.

பிறகு ஊர் மக்கள் குடிநீர் குழாய்க்கு அழைத்து சென்று, ஸ்டெர்லைட் ஆலையால் தங்களது நிலத்தடி நீர் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை போத்தலில் நிரப்பி காட்டினர்.

மேலும் தங்கள் போராட்டத்திற்கு பந்தல் அமைக்க கூட காவல்துறை நெருக்கடி கொடுப்பதாக குற்றம் சாட்டினர். 

பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் அவர்கள், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக தமிழக அரசு மூட வேண்டும் என்றும், மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும், மக்கள் போராட்டத்திற்கு காவல் துறையினர் கெடுபிடிகள் செய்யக்கூடாது என்றும் கூறினார்.

அங்கிருந்து விடைபெறும் போது, அந்த சிறுவன் எழுப்பிய முழக்கங்கள் 

எல்லோரையும் உசுப்பியது.

“நீரும் போச்சு, நிலமும் போச்சு..

வானும் போச்சு..! வளமும் போச்சு..!

புற்றுநோய்.. புற்றுநோய்..

ஊர் எங்கும் புற்றுநோய்..

தொற்று நோய் தொற்று நோய்..

ஊரெங்கும் தொற்று நோய்..

பள்ளி செல்லும் பிள்ளைகள்

கல்லறைக்கு போவதா…?

மத்திய அரசே.. மாநில அரசே..

என்ன குற்றம் நாங்கள் செய்தோம்..?

இக்களத்தில் மஜக மாநில செயலாளர் சீனி முகம்மது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சாகுல் ஹமீது, வழுத்தூர் ஷேக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் எ.எம்.ஹாரிஸ், மாவட்ட பொருளாளர் நவாஸ், மாவட்ட துணை செயலாளர் நஜீப், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் நிலா இக்பால், மாவட்ட வழக்கறிஞர் செயலாளர் ஜெய்லானி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் மனிதநேய சொந்தங்கள் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter