Home » அதிரை மத்திய  அரசை கண்டித்து தோழமை கட்சியினர் சாலையில் மறியல் !!

அதிரை மத்திய  அரசை கண்டித்து தோழமை கட்சியினர் சாலையில் மறியல் !!

0 comment

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் காவிரி மேலாண்மை வாரியம் உடன் அமைத்திட கோரி மத்திய  அரசை கண்டித்து தோழமை கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம்; திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம. குணசேகரன் .தலைமையில்  &அவைத்தலைவர் JJ.ஷாகுல் ஹமீது சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது

திமுக துணைச்செயலாளர் ஏ.எம்.ஒய் அன்சர்கான் சிறுபான்மை அமைப்பாளர் மரைக்கா கே.இத்ரீஸ்அகமது இலக்கிய, பகுத்தறிவு பேரவை  தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் .பழஞ்சூர் மு. செல்வம் ஏனாதிபாலு, ரமேஷ்,  

காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் தலைவர் எஸ்.கே கார்த்திகேயன், மனிதநேய மக்கள் கட்சி அதிரை பேரூர் தலைவர் எம். சாகுல் ஹமீது, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மமக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், மமக அதிரை பேரூர் செயலர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விரைந்து வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து சமூக நல கூடத்தில் வைத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter