Home » மலேசியாவில் விபச்சாரம் கும்பலில் சிக்கிய தஞ்சை பெண்!!    அதிரை SDPI கட்சியினரால் மீட்பு..!!

மலேசியாவில் விபச்சாரம் கும்பலில் சிக்கிய தஞ்சை பெண்!!    அதிரை SDPI கட்சியினரால் மீட்பு..!!

0 comment

மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி  விபச்சாரத்திற்கு விற்பனை செய்த பட்டுக்கோட்டை பக்கம் உள்ள செங்கமரக்காடு என்ற கிராமத்தை சேர்ந்த பெண்ணை திருச்சி விமான நிலையத்திற்கு மீட்டு கொண்டுவரப்பட்டது.அப்போது விமான நிலையத்தில் அவர் கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பக்கம் உள்ளசெங்கமரக்காடு என்ற கிராமத்தை சேர்ந்த சேகர் மகள் பானுப்பிரியா (வயது 25) மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது கணவரை இழந்த பானுப்பிரியா பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார்.அப்போது அங்கே அவர்க்கு ஒரு பெண் அறிமுகமானார்.அந்த பெண் மலேசியாவில் ஓட்டல் வேலை வாங்கி தருவதாக கூறி டிசம்பர் மாதம் அனுப்பிவைத்தார்.ஆனால் மலேசியாவில் எந்த வேலையும் கொடுக்கவில்லை.ஆனால் அவரை விபச்சாரத்திற்காக பானுப்பிரியாவை சினார்களிடம் 3 ஆயிரம் வெள்ளிக்கு விற்றுவிட்டனர்.இதனை எதுவும் அறியாத பானுப்பிரியா சினார்களோடு சென்றார். ஆனால் அவரை விபச்சாரத்திற்கு உட்படுத்த முயன்றனர்.அப்போது தான் தன்னை விபச்சாரத்திற்கு விற்றுவிட்டார்கள் என அறிந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பானுப்பிரியா அங்கே இருந்து தப்பி மலேசிய தமிழர்களிடம் வந்தார்,பின்னர் அங்கே இருக்கும் SDPI  நிர்வாகள் உதவியுடன் மலேசிய காவல்துறையிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து மலேசிய போலீசார் அங்குள்ள காப்பகத்தில் கடந்த மூன்று மாதம் தங்க வைத்தார். இதற்க்கு இடைய இதன் தொர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.அதன் பின்னர் SDPI கட்சி நிர்வாகளிடம் மலேசிய போலீசார் ஒப்படைத்தார். அவர்கள் சொந்த செலவில்

பானுப்பிரியாவை நேற்று இரவு 9 மணிக்கு ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி அனுப்பி வைத்தார்.இரவு 11 மணிக்கு திருச்சி வந்த பானுப்பிரியாவை திருச்சி SDPI மாவட்ட செயலாளர் ஹசன், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இழியஸ் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் பானுப்பிரியாவை வரவேற்று அழைத்து சென்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter