Home » அதிரையில் தமுமுக ஆதரவுடன் நடைபெற்ற பாசிசத்திற்கு எதிரான மக்கள் மேடை பைக் பேரணி மற்றும் பிரச்சாரம்..!

அதிரையில் தமுமுக ஆதரவுடன் நடைபெற்ற பாசிசத்திற்கு எதிரான மக்கள் மேடை பைக் பேரணி மற்றும் பிரச்சாரம்..!

0 comment

தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் பாசிசத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு அரசு தடை விதித்து வருகிறது.

மத வெறியை தூண்டும் விதத்தில் செயல்படும் பல பாசிசவாதிகளுக்கு அவர்களின் பேரணி போன்றவற்றிற்கு ஆதரவு தெரிவித்து, மக்களுக்கு தேவையான விஷயங்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்துபவர்களை தொடர்ந்து கைது செய்வது அல்லது போராட்டத்தை தடுத்து நிறுத்தி தமிழகத்தில் பாசிசத்திற்க்கு ஆதரவு தெரிவிக்கும் காவி பயங்கரவாதிகளுக்கு எதிராக சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஏப்ரல் 1 முதல் 10வரை “பாசிசத்திற்கு எதிரான மக்கள் மேடை” என்ற தலைப்பில் இளைஞர்கள் ஒன்றிணைந்து பேரணியாக சென்று பாசிசத்திற்கு எதிரான  பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக அதிராம்பட்டினம் பகுதிக்கு நேற்று(06/04/2018)வெள்ளிக்கிழமை  பகல் சுமார் 2மணியளவில் வருகைதந்தனர்.

அவர்களை அதிரை வண்டிப்பேட்டை பகுதியில் இருந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வரவேற்று பைக் பேரணியாக பேருந்து நிலையம் வந்தடைந்தனர்.

பேருந்து நிலையத்தில் சுமார் அரைமணிநேரத்திற்கும் மேலாக பாசிசத்திற்கு எதிரான மக்கள் மேடையின் ஒருங்கிணைப்பாளர்களான அருண் மற்றும் சதீஷ் ஆகியோர் கண்டன   பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அதன் பின்னர் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டு செயலாற்றி வரும் இளைஞர்களுக்கு தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் வருகைதந்த இளைஞர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வழி அனுப்பினர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter