224
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அரசு பேருந்தில் ஒரு பெண் பயணம் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் நகை திருட்டு.
பேராவூரணியில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற அரசு பேருந்தில் மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த சரிபா என்னும் பெண்மணி பயணம் செய்து கொண்டிருந்தபோது தன் கையில் அணிந்திருந்த 4 அரை பவுன் வளையலை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதனையடுத்து அந்த பெண்மணி உடனே அதிரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் அப்பெண் பயணித்து வந்த அரசு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்தினர் இருவரையும் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர். இதில் இருவரும் திருடவில்லை என தெரியவந்தது