Home » மும்பை ஐபில் மைதானத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு..!!!

மும்பை ஐபில் மைதானத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு..!!!

0 comment

11 ஆவது ஐ.பி.எல் போட்டி நேற்று மும்பையில் கோலாகலமாக தொடங்கி நடந்துகொண்டிருந்தபோது, மைதானத்தில் தமிழர் ஒருவர் BAN STERLITE என்ற பதாகையை உயர்த்திப்பிடித்து, தனது ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பினை பதிவு செய்திருந்தார்.

மும்பை வான்கடே மைதானத்தில் 11 ஆவது ஐ.பி.எல் போட்டி நேற்று ஆரம்பமாகியது. இந்த போட்டி தொடர் மே மாதம் 27 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவுள்ளது.

கோலாகலமான கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று ஆரம்பமான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழக அராசியில் தலைவர்களும், பல துறை பிரபலங்களும், சென்னையில் ஐபில்போட்டிகள் நடக்க கூடாது எனவும், நடந்தால் மைதானத்தில் போராட்ட பதாகைகளை உயர்த்திப்பிடித்து, உலகத்தின் பார்வையை தமிழகத்தின் பக்கம் திருப்ப வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய போட்டி நடந்த மும்பை வான்கடே மைதானத்தில் தமிழர் ஒருவர் BAN STERLITE என்ற பதாகையினை உயர்த்திப்பிடித்து, தனது ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பினை பதிவு செய்திருந்தார்.

இந்த ஒரு பதாகை, அடுத்த போட்டிகளில் ஓராயிரம் பதாகைகளாக மாறி விடுமோ என்ற அச்சம் ஐ.பி.எல் நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter