215
அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது.
இதனால் மக்களும் பல்வேறு இயற்கை குளிர்பானங்களை அருந்தி வெயிலின் தாக்கத்தை குறைத்து குறைத்துவருகின்றனர்.
இந்நிலையில்,பல்வேறு இடங்களிலும் சிறுது மழை பெய்தும் வருகிறது.
இதன் ஒரு பகுதியாக
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சுமார் இரு தினங்களாக வானம் சிறிது நேரம் மேகமூட்டத்துடன் காணப்படுவதும் அதன் பின்னர் வெயில் மக்களை வாட்டுவதுமாக இருந்தது.
இந்நிலையில், அதிரை பொதுமக்களின் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் இன்று(13/04/2018) அதிகாலை சுமார் 6:30மணியளவில் லேசான மழை பெய்து அதிரையை குளிர்வித்தது.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.