155
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் நேற்று ஆசிபாவிற்கு நீதி கோரி தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்துகொண்டனர்.
இணமிழையல், இன்று காலை முதல் போலீசார் தமுமுக நிர்வாகிகளை கைது செய்து வருகிறது.
இந்நிலையில்,அதிரை தமுமுக நகர செயலாளர் கமாலுதீன் அவர்களை போலீசார் கைது செய்ய சென்றபோது அவர் வெளியூர் சென்றுள்ளதால் அவருடைய ஹோட்டலில் வேலை பார்த்து வந்த மூன்று பரோட்டா மாஸ்டர்கள் கைது செய்து போலீசார் அழைத்து சென்றனர்.
கைது செய்ய வேண்டிய நபருக்கு பதிலாக அங்கு பணி புரிந்த அப்பாவிகளை கைது செய்ததற்க்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.