163
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெரு பகுதியை சேர்ந்த ராஜசேகர்_(வயது 54), அதிரை அல் அமீன் பள்ளிவாசல் அருகாமையில் மரபட்டை வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் இன்று இரவு (17.04.2018) சுமார் 09:40மணியளவில் அதிரை THREE STAR உடற்பயிற்சி மையம் அருகே மர்ம நபர்களால் வெட்டப்பட்டார். கை மற்றும் உடம்பில் வெட்டபட்டு பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
இதனை தொடர்ந்து, அப்பகுதியில் கூச்சல் சத்தம் கேட்டதைகண்டு வந்த அக்கம்பக்கத்தினர் ராஜசேகரை அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், ராஜசேகரை மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு தமுமுக அவசர ஊர்தி மூலம் கொண்டு சென்றுள்ளனர்.
முழு தகவல்களையும் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் இணையத்துடிப்புடன்…