அதிரையர்களே…!! கண்டிப்பாக இதை படியுங்கள்..அறியுங்கள்..!!
தொழில்நுட்ப காலத்தை நோக்கி நாம் பயணம் செய்து கொண்டு இருக்கோம்.இந்த காலத்தில் தொழிநுட்ப வளர சுற்றுச்சூழல் அழிந்து கொண்டே வருகிறது.
நமது மக்களுக்கு சுற்றுச்சூழல் என்பது என்றுகூட தெரியாமல் ஒரு நிலை உருவாகி வருகிறது.
வாங்க சுற்றுச்சூழல் என்றால் எண்ணென்று பார்ப்போம்….
மனிதன் உட்பட அனைத்து ஜீவன்களும் வாழ்வதற்கு ஏற்ற இடம்தான் இந்த புவிமண்டலமாகும். இந்த புவி மண்டலம் சீராக இயங்குவதற்கு ஐந்து வகையான ஏற்பாடுகள் அவை;
1.நிலம்
2.நீர்
3.காற்று
4.ஆகாயம்
5.நெருப்பு
இந்த ஐந்து வகையான ஏற்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டுதான் வளம் வர இயலுமே தவிர இந்த ஒன்றில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டு விட்டால் இந்த உலகம் நாசத்தைத்தான் அதிகம் அடையும்
பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் சீர்கேடுகள்…
பசு, நாய், கால்நடைகள், வனவிலங்குகள் போன்றவை உணவுடன் (வீணாகும் உணவு) பிளாஸ்டிக் குப்பையை உட்கொள்வதால் உணவுக் குழாய் அடைப்பாட்டினால் துன்புறவும், மரணமடையவும் ஏதுவாகிறது.வீட்டிலிருந்து தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணின் (உயிர்வேதியியல்) தன்மையைப் பாதிக்கிறது.பிளாஸ்டிக் குடிதண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் போன்றவை எக்காலத்திலும் அழியாது. இவைகள் சாக்கடைகள் போன்ற இடங்களில் அடைத்து கொண்டு பல இன்னல்களை ஏற்படுத்துகின்றன.நம் அன்றாட வாழ்வில் தூக்கியெறியப்படும் பிரிக்காத குப்பைகளினால் கொசுக்களால் பரவும் கொடிய நோய்கள் உருவாக காரணமாகிறது.பிளாஸ்டிக் உறைகளால் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட, உணவுப்பொருட்களால் உடலுக்கு பல ஊறுவிளைகிறது.கடல், நீர்நிலைகள், கழிவுச் சாக்கடைகள் போன்ற இடங்களில்பிளாஸ்டிக் பைகளால், கழிவு நீரில் தேக்கம் ஏற்பட்டு புதிய நோய்கள் பரவவும், சுகாதாரக் கேடு உருவாகவும் பிளாஸ்டிக் காரணமாகிறது.பிளாஸ்டிக் பைகள் மற்றும் தூக்கி எரியப்பட்ட பிளாஸ்டிக் பேக்கேஜிங் பொருட்கள் மழை நீர் ஊடுருவி நிலத்தடி சென்றடைய இடையூறாக உள்ளது.மனிதன் இயற்கையை மறந்து செயற்கையை தேடல்மக்கள் பண்டைய காலங்களில் இருந்து வாழை இலையில் சாப்பிடுவதும் துணிப்பைகளில் தாம்பூல பைகள் தருவதும் வழக்கமாக கொண்டிருந்தார்கள். பித்தளை, சில்வர் போன்றவைகளில் தண்ணீர் சேமித்தல், நீர் அருந்துதல், போன்ற முறைகளில் இருந்தவர்கள் தற்போது பிளாஸ்டிக் மோகத்தில் இயற்கை வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் இலைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள் போன்ற எண்ணற்ற வடிவில் செயற்கையை நாடிச் செல்கின்றனர். ஆனால் பிளாஸ்டிக்கால் உருவாகும் பொருட்கள் அனைத்தும் வேதிமுறையில் தயாரிக்கப்பட்டவை. இந்த பிளாஸ்டிக்கில் சூடாகவோ, குளிர்ச்சியாகவோ, வெகு நாட்களாக இருப்பினும் பிளாஸ்டிக்கானது வேதிவினை புரிந்து அவற்றை நாம் பயன்படுத்தும் போது நம் உடலில் தேவையற்ற கொடிய வேதிப்பொருட்கள் சேர்த்து பல நோய்களுக்கு காரணமாவும், கேன்சர் போன்ற வியாதியை உருவாக்கும் தன்மையையும் கொண்டதாகவும் உள்ளது. மேலும் இது வளரும் நமது சந்ததியினரையும் வெகுவாகப் பாதிக்கிறது.
அடுத்த பதிவில் பிளாஸ்டிக் தவிர்த்தல் பற்றி பார்ப்போம்…
இணைந்திருங்கள் இணையதுடிப்புடன்…